அப்பா பயன்படுத்திய காமிராவால் சின்னவயசிலிருந்தே ஈர்க்கப்பட்டவர் நித்யா ராதாகிருஷ்ணன். இப்போது தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரிந்தாலும் காதலாக இருப்பது புகைப்படக் கலையில்தான். இயற்கை, நிலப்பரப்பு என்று தன் காமிரா கண்களால் பதிவுசெய்துகொண்டே இருக்கிறார். வண்ணங்களின் தோழியாக இருக்கும் இவர் காய்கறிகளை வெட்டி உருவாக்கிய உருவங்களின் புகைப்படங்களும் அழகுணர்வுடன் உள்ளன. nithsphotography என முகநூலில் இயங்குகிறார்.
மார்ச், 2016.